தேசிய எரிபொருள் பாஸ் QR அமைப்பில் இரு புதிய அம்சங்களைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் !

தேசிய எரிபொருள் பாஸ் QR அமைப்பில் இரண்டு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று அறிவித்துள்ளார்.

வாகனம் அல்லாத தேவைகளுக்கு QR வசதி செய்யப்பட்டுள்ளமை முதல் அம்சமாகும் என்று அமைச்சர் கூறினார்.

புதிய அம்சத்தின் கீழ், மின் பிறப்பாக்கிகள், புல் வெட்டும் கருவிகள் மற்றும் பிற சாதனங்கள் போன்ற மோட்டார் அல்லாத வகைகளுக்கு எரிபொருளை விநியோகிக்க இது கிடைக்கப்பெற்றுள்ளது என்றார்.

பதிவு செய்யும் முறை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

இரண்டாவதாக, எரிபொருள் பாஸ் குறுஞ்செய்தியில் நிரப்பு நிலையக் குறியீட்டு எண் சேர்க்கப்படும் என்றார்.

எரிபொருள் பரிவர்த்தனை முடிந்ததும் உருவாகும் குறுஞ்செய்தியில் நிரப்பு நிலையக் குறியீடு எண் சேர்க்கப்படும் என்றார்.
Published from Blogger Prime Android App