நாடாளுமன்ற உறுப்பினர்களின் மருத்துவக் காப்புறுதித் தொகையை 10 இலட்சம் ரூபாயாக அதிகரிக்க தீர்மானம் !

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மருத்துவக் காப்புறுதித் தொகையை 10 இலட்சம் ரூபாயாக அதிகரிப்பதற்கான யோசனையை முன்வைக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் அவைக் குழுவில் விவாதிக்கப்பட்ட போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனைத் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெற்றுக்கொண்ட மருத்துவக் காப்புறுதி இரண்டு இலட்சம் ரூபாயாகும். பொருளாதார சூழ்நிலை காரணமாக அனைத்து மருத்துவ சேவைகளும் அதிகரித்துள்ள நிலையில் காப்புறுதித் தொகை போதுமானதாக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Published from Blogger Prime Android App