நாட்டின் 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை !

இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்வு நிலை நீடிப்பதால், நாட்டின் 13 மாவட்டங்களில் கடும் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எனவே, நிலவும் மழையுடனான வானிலை நாளை பிற்பகல் 01 மணியுடன் முடிவடையும் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம் எனவும், அதேசமயம் தீவின் ஏனைய இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published from Blogger Prime Android App