அம்பாறையில் 156 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு !

156 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு அம்பாறை நகர சபை மைதானத்தில் சிறப்பாக சனிக்கிழமை(15) மாலை நடைபெற்றது.

இதன்போது பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ராஜித சிறி தமிந்த கலந்து கொண்டு சிறப்பித்தார்.

குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் நாட்டிற்காக உயிர்நீத்த பொலிஸாருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் பொலிஸ் மரியாதை அணிவகுப்பினை பிரத விருந்தினர் பார்வையிட்டார். மேலும் ஆண் பெண் பொலிஸாரின் மரியாதை அணிவகுப்பு விசேட அதிரடிப்படையின் மோட்டார் சைக்கிள் நிகழ்வுகள் பொலிஸ் மோப்ப நாய்களின் சாகசங்கள் வர்ண வானவேடிக்கை நிகழ்வு பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் பவனி உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றது.

மேலும் கடந்த காலங்களில் சிறப்பாக செயற்பட்ட பொலிஸாருக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிகழ்வில் திருகோணமலை ,மட்டக்களப்பு, கந்தளாய், பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் அம்பாறை ,மட்டக்களப்பு, திருகோணமலை, அரசாங்க அதிபர்கள் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டீ.ஜே.ரத்னாயக்க, உள்ளிட்ட கிழக்கு மாகாண முப்படை உயரதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் பொலிஸார் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Published from Blogger Prime Android App