2023 இல் 8,000 புதிய ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளபடுவர் - கல்வி அமைச்சர் தெரிவிப்பு !

ஓய்வுபெறும் வயதெல்லையை 60 ஆக உயர்த்தியதன் காரணமாக ஏற்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பவும் கல்வித்தரத்தை உயர்த்தவும் 2023 இல் 8,000 புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 2023ஆம் ஆண்டு 8,000 ஆசிரியர்கள் ஓய்வுபெறவுள்ளதாகவும், இந்த வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் அமைச்சர் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சு ஏற்கனவே விண்ணப்பங்களை கோரியுள்ளதாகவும், திறன் பரீட்சையின் அடிப்படையில் ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

புதிய ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் தேசிய கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் டிப்ளோமாவை நிறைவு செய்யா வேண்டும். மேலும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளை பல்கலைக்கழக மட்டத்திற்கு தரமுயர்த்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
Published from Blogger Prime Android App