பொலிஸ் மா அதிபர் உட்பட 20 பேருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு !

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன உள்ளிட்ட 20 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கம் அறிவித்த அதி உயர் பாதுகாப்பு வலய பிரகடனத்துக்கு எதிராக கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி அமைதியான போராட்டத்திற்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சோசலிச இளையோர் சங்கத்தின் 6 செயற்பாட்டாளர்கள் தாக்கல் செய்துள்ள இம்மனுவில், 20 பொலிஸ் அதிகாரிகள் பிரதிவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.

இதுவரை இரு மனுக்கள் இந்த விடயத்தில் தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியும் நேற்று முன் தினமும் இது தொடர்பாக இரண்டு மனுக்கள் இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

தாக்குதல் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அதற்கு கட்டளையிட்ட பொலிஸ் அதிகாரிகளையும் காணொளி மூலம் அடையாளம் கண்டதாக மனுதாரர்களின் சட்டத்தரணி சுனில் வட்டகல குறிப்பிட்டார்.

Published from Blogger Prime Android App