மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ, அலி சப்ரி உள்ளிட்ட 39 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரிக்க அனுமதி !

முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ, அலி சப்ரி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால், டபிள்யு.டி.லக்ஷ்மன், மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட 39 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் இரண்டிணை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

முறையற்ற நிதி முகாமைத்துவத்தின் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் L.T.B. தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையின் பின்னர் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Published from Blogger Prime Android App