குளவி கொட்டுக்கு உள்ளாகி ஆசிரியர்கள் , மாணவர்கள் உட்பட 40 பேர் வைத்தியசாலையில் அனுமதி !

வவுனியா போகஸ்வெவ மகா வித்தியலயத்தில் மாணவர்கள் உட்பட ஆசிரியர்களுக்கு குளவி கொட்டியதில் 40 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (17) காலை பாடசாலை பிரார்த்தனையில் ஈட்பட்டிருந்தபோது பாடசாலை கட்டிடத்தில் காணப்பட்ட குளவி கூடு கலைந்து கொட்டியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உட்பட ஆசிரியர்களில் 12 பேர் பதவிய வைத்தியசாலையிலும் 3 பேர் மாமடு வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் பாடசாலையில் காணப்பட்ட குளவி கூட்டை அகற்றுவதற்கு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்காமையே இவ்வனர்த்ததுக்கு காரணம் என பெற்றோர் தெரிவித்தனர்.

Published from Blogger Prime Android App