சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழப்பு, 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு !

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, 11 மாவட்டங்களில், 14 ஆயிரத்து 309 குடும்பங்களைச் சேர்ந்த 56 ஆயிரத்து 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களினால் 5 வீடுகள் முழுமையாகவும் 207 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட 660 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 383 பேர் பாதுகாப்பான 36 இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published from Blogger Prime Android App