60 வயது ஓய்வு சுற்றறிக்கையால் 800 மருத்துவர்கள் ஓய்வு பெறுவார்கள் !

60 வயதை எட்டிய அரச ஊழியர்கள் ஓய்வு பெறவேண்டும் என்ற சுற்றறிக்கையின் காரணமாக 300 நிபுணர்கள் உட்பட 60 வயதுக்கு மேற்பட்ட 800க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெறுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் உபுல் கலப்பட்டி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன் காரணமாக நாட்டில் சுகாதார சீர்கேடு ஏற்பட உள்ளதாக தெரிவித்த கலப்பிட்டி, இந்த பிரச்சினைகள் காரணமாக கொழும்பிற்கு வெளியே உள்ள வைத்தியசாலைகள் மூடப்படலாம் எனவும் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த உரையாற்றிய உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, சுகாதார சேவையின் அவசியத்தை கருத்தில் கொண்டு ஓய்வு பெறும் வைத்தியர்கள் தொடர்பில் மீண்டும் ஆலோசனை செய்யப்படும் என தெரிவித்தார்.
Published from Blogger Prime Android App