புதிய நீர் இணைப்புகளுக்கு அறவிடப்படும் அடிப்படைக் கட்டணத்தை 70 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை !

புதிய நீர் இணைப்புகளுக்கு அறவிடப்படும் அடிப்படைக் கட்டணத்தை 70 வீதத்தால் அதிகரிக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த உயர்வின் மூலம், அரை அங்குல குழாய் இணைப்புக்கு இதுவரை வசூலிக்கப்பட்ட 16,000 என்ற தொடக்கக் கட்டணம் 27,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மூன்று அங்குல குழாய் இணைப்புக்கான 30,000 ரூபாயாக இருந்த ஆரம்பக் கட்டணம் 51,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.
Published from Blogger Prime Android App