நாட்டில் 83 வீதமான மரணங்கள் தொற்றா நோய்களினால் ஏற்படுகின்றன : சுகாதார அமைச்சு !

நாட்டில் 83 வீதமான மரணங்கள் தொற்றா நோய்களினால் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நீரிழிவு, உயர் குருதி அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்களினால் உயிரிழப்பதாக தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சாந்த குணவர்தன தெரிவித்தார்.

நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு மாத்திரமே தேவைப்படுகின்ற போதிலும், அநேகமானோர் அதிகளவான உப்பை சேர்ப்பதால் உயர் குருதி அழுத்தம் ஏற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.Published from Blogger Prime Android App