சமூக பாதுகாப்பு வரியால் உணவு வகைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது !

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி விதிக்கப்பட்டதன் பின்னர் பெரும்பாலான உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் (AICOA) இன்று தெரிவித்துள்ளது. வரி விதிக்கப்பட்ட உடனேயே, உணவு தொடர்பான பெரும்பாலான பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதாக சங்கத்தின் தலைவராணா அசேல சம்பத் தெரிவித்துள்ளார்,

மதிய உணவுப் பொதியின் விலையை அதிகரிப்பது தொடர்பில் நாங்கள் இதுவரை எந்தவொரு கூட்டு தீர்மானமும் எடுக்கவில்லை, ஆனால் பெரும்பாலான ஹோட்டல்கள் விலையை ரூ.10, ரூ.15, மற்றும் ரூ.20 என உயர்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விலையேற்றத்தால் பிரைட் ரைஸ், கொத்து மற்றும் இதர துரித உணவு வகைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

லிட்ரோ எரிவாயுவின் சமீபத்திய விலைக் குறைப்பு, மதிய உணவுப் பொதிகளின் விலையை ஒரு கணிசமான விலையில் வைத்திருக்க மிகவும் உதவியாக இருந்தது. எவ்வாறாயினும், நாளை முதல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை லிட்ரோ நிறுவனம் குறைத்த பின்னர் முடிவை அறிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Published from Blogger Prime Android App