அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக் காலம் முடிவடையும் : நீதி அமைச்சர் !

22ஆவது திருத்தும் அமுலாகியுள்ள நிலையில், தற்போது இயங்கி வரும் அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக் காலம் முடிவடையும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என நம்புவதாக விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து 2 வார காலத்திற்குள் ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேசிய தேர்தல் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, தேசிய கணக்காய்வு ஆணைக்குழு, பொது சேவை ஆணைக்குழு உள்ளிட்ட ஆணைக்குழுக்கள் இதில் அடங்கும்.
Published from Blogger Prime Android App