ராஜபக்சக்களுக்கு பதவி பேராசை போகவில்லை..! சரத் பொன்சேகா எம்.பி

நாட்டு மக்கள் தற்போது அனுபவித்து வரும் துயரங்களுக்கு தாமே காரணம் என்பதை உணராமல் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறும் ராஜபக்சக்களின் ஆட்சி மீண்டும் அமைக்கப்பட்டால் தற்போதுள்ளதை விட கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வசந்த முதலிகே உள்ளிட்டோரை பார்வையிடுவதற்காக சென்றிருந்த சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

ராஜபக்சக்களுக்கு இன்றும் அதிகார பேராசை காணப்படுவதோடு இதுவரை கொள்ளையடித்து, திருப்தியடைய முடியாமலேயே அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெறுவோம் என்று பேசிக்கொண்டிருக்கின்றனர். எனினும் அவர்கள் முன்னெடுக்கும் இந்த முயற்சி ஒழுக்கமானதல்ல. இவ்வாறான செயற்பாடுகளுக்கு உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் வரவேற்பிருக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Published from Blogger Prime Android App