பெற்றோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்பட்டுள்ளன.

பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் இன்று (திங்கட்கிழமை) இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதன்படி, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 40 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 92 ரக பெற்றோலின் புதிய விலை 370 ரூபாயென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, டீசலின் புதிய விலை 415 ரூபாயென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பெற்றோலிய பொருட்களின் விலை அப்படியே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published from Blogger Prime Android App