இலங்கை வந்த நிலக்கரி கப்பல்!

நிலக்கரியை ஏற்றிய சரக்கு கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் நேற்று (25) பிற்பகல் இலங்கையை வந்தடைந்ததாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

60,000 மெற்றிக் தொன் நிலக்கரி ஏற்றிய சரக்கு கப்பலில் இருந்து இன்று (26) நிலக்கரி இறக்கும் பணி நடைபெறும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலக்கரி இருப்பு ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் நிலக்கரி ஏற்றிய மேலும் 05 கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


Published from Blogger Prime Android App