எம்.ஜே.எம்.அஸாஹிம் ஜிப்ரி அகில இலங்கை மொழிபெயர்ப்பாளராக சத்தியப்பிரமானம்

சமீபத்தில் நீதி அமைச்சினால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்திபெற்று அகில இலங்கை மொழிபெயர்ப்பாளராக திரு. எம்.ஜே.எம்.அஸாஹிம் ஜிப்ரி அவர்கள் மாத்தளை மாவட்ட நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 

மர்ஹும் ஜனாப்.முஹம்மட் ஜிப்ரி (முன்னாள் ஆசிரியர்), திருமதி.அஹமட் நிசா தம்பதியினரின் மூத்த புதல்வாரன இவர், தன்னுடைய ஆரம்பக் கல்வியை கலேவெல, தேஹுவ முஸ்லிம் வித்தியாலயத்திலும், இரண்டாம் நிலைக் கல்வியை கலேவெல அல்-புர்கான் முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் பயின்று, பேராதனை பல்கலைக் கழகத்தில் விசேட கலைமாணிப் பட்டம் பெற்று, பட்டப் பின் டிப்ளோமா கற்கையை மனிதவள அபிவிருத்தி துறையிலும், ஆரம்பமாக அரச துறை பதவியை 2003 ஆம் ஆண்டு இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் களுத்துறை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையில் ஆரம்பப் பயிற்சியுடன் வெறியேறி, பொலிஸ் பொதுசன உறவுகள் உத்தியோகத்தராக நுவரெலியாவில் கடமையில் சேர்ந்து, பிற்பாடு 2005 ஆம் ஆண்டில் தொழில் உறவுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் (மனிதவலு, வேலைவாய்ப்புத் திணைக்களத்தின்) மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தராகவும், 2010 ஆம் ஆண்டில் உற்பத்தித்திறன் மற்றும் மனிதவலு அமைச்சிலும், அதில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் நிகழ்கால உற்பத்தித்திறன் நடுவர் குழுவின் அங்கத்தவராகவும் (Productivity Award Judge Panel Member), 2013 தொடக்கம் இன்றுவரை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் சிறுவர் செயலகம் (தற்போதைய முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம்) மற்றும் உலக வங்கி அனுசரணை முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி செயற்றிட்டத்தின் செயற்றிட்ட உத்தியோகத்தராகவும் கடமையாற்றிவருகிறார். சமகாலத்தில் உலக வங்கி முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி செயற்றிட்டத்தின் பிரதம பயிற்றுவிப்பாளராகவும் (ECD Master Trainer), மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சரின் (முன்னாள்) இணைப்பதிகாரியாகவும் கடமையாற்றிய பன்முக ஆளுமைமிக்கவராவார்.  

பல்வேறு அரச துறை நிறுவனங்களில் சுயாதீன மொழிபெயர்ப்பாளர் சேவையை வழங்கிவரும் அவர், மொழிபெயர்ப்புத் துறையில் அனுபவம் பெற்ற ஒருவர் என்பதுடன், அகில இலங்கை மொழிபெயர்ப்பாளராக நியமனம் பெற்றுள்ளமையைத் தொடர்ந்து, அவர் அரச அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளராக மற்றும் சர்வதேச மற்றும் உள்நாட்டு அச சார்பற்ற பல அமைப்புகளில் அனுபவம் மற்றும் மொழிபெயர்ப்பு ஆற்றல் இத்துறையில் நீடித்து சேவையாற்ற இவருக்குக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகும்.            


Published from Blogger Prime Android App