பாராளுமன்ற கோப் குழு தலைவராக ரஞ்சித் பண்டார தெரிவு !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது சபையின் பொது அலுவல்கள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் (கோப் குழு) தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவும், சமகி ஜன பலவேகய கட்சியைச் சேர்ந்த எரான் விக்கிரமரத்னவும் இந்தப் பதவிக்கு முன்மொழியப்பட்டனர். வாக்களிப்பில் ரஞ்சித் பண்டார பதினான்கு வாக்குகளை பெற்றார் எரான் விக்கிரமரத்னவுக்கு ஏழு வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
Published from Blogger Prime Android App