பெண் ஒருவரின் கொலை தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாரால் தேடப்படும் நபர்!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புலிபாய்ந்தகல் பகுதியில் 2018 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தலைமறைவாகியுள்ள நபர் தொடர்பாக தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறு, பொதுமக்களிடம் மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2018 மாச் மாதம் 16 ஆம் திகதி வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புலிபாய்ந்தகல் பகுதி ஆற்றப் பகுதியில் வவுனியா கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த மருதை சுதஷ்சினி என்ற பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இது தொடர்பாக வாழைச்சேனையைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் மத்தியகிழக்கு நாட்டில் வேலை செய்துவரும் நிலையில் வாழைச்சேனையைச் சேர்ந்த 33 வயதுடைய இராமச்சந்திரன் சுசாந்தன் என்பவர் காதலித்து வந்துள்ளதாகவும் காதலனுக்கு அதிகமான பணத்தை வழங்கிய நிலையில் அவள் 2018 மாச் மாதம் 16 ஆம் திகதி விமானமூலம் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தபோது அவளை காதலன் சென்று வாழைச்சேனைக்கு பஸ்வண்டியில் அழைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் காதலனிடம் பணத்தை கேட்ட நிலையில் அவளை முச்சக்கரவண்டி ஒன்றி ஏற்றிச் சென்று புலிபாய்ந்தகல் ஆற்று பகுதியில் வைத்து அவளின் தலையில் போத்தலால் அடித்து அவளை கொலைசெய்துவிட்டு சடலத்தை அங்கு விட்டுவிட்டு காதலன் தப்பி ஓடிதலைமறைவாகியுள்ளார்.

இந்த கொலை தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எம்.எப். சந்திரகுமார தலைமையில் பொலிஸ்சாஜன் கே. ஹாரூன் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டுவரும் நிலையில் தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேக நபரான படத்திலுள்ள வாழைச்சேனையைச் சேர்ந்த 33 வயதுடைய இராமச்சந்திரன் சுசாந்தன் தொடர்பாக தகல் ஏதேனும் தெரிந்தால் மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு 065-2260500 எனும் தொலைபேசி இலக்கம் ஊடக அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொதுமக்களின் உதவியை பொலிசார் கோரியுள்ளனர்.