நீதியமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் !

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது . இந்தியாவிலிருந்து நாடு திரும்பி யாழ்ப்பாண மாவட்டத்தில் வசித்து வரும் இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பமானது.

இதில், நீதி மற்றும் சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, நீதியமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களது பிரச்சினைகளுக்கான உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதுPublished from Blogger Prime Android App