விடுதலைப் புலிகளை நான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை : எரிக்சொல்ஹெய்ம் !

விடுதலைப் புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை என முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தீவிரவாத போக்குடைய தமிழ் மற்றும் சிங்களவர்களே இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் மாகாணங்களிற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆயுதமோதலின் போது உயிரிழப்பு என்பது சாத்தியமே என்றாலும் காணாமல் போனவர்கள் குறித்து மேலதிக தகவல்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பிய தாம் அதன் ஒரு பகுதியாக இருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
Published from Blogger Prime Android App