இரட்டைக் குடியுரிமை : இறுதி தீர்மானம் இன்று !

பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இரட்டைக் குடியுரிமை தொடர்பான விசாரணை இன்று (31) நிறைவடையவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டறிய விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களின் பிறந்தநாள் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கங்களை கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் குடிவரவு குடியகல்வு திணைக்களம் கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்பிறகு, குடிவரவுத் திணைக்களம் உரிய பட்டியல்களைச் சரிபார்க்க ஆரம்பித்துள்ளது. எவ்வாறாயினும், இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினராக எவரும் அடையாளம் காணப்படவில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று இறுதித் தீர்மானத்தை வழங்க முடியும் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
Published from Blogger Prime Android App