உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்துநர்களுக்கான அறிவித்தல் !

2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் திருத்துநர்களுக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தினூடாக மாத்திரம் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

https://www.doenets.lk என்ற இணைத்தளத்தின் மூலம் இம்மாதம் 07 ஆம் திகதி முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன அறிவித்துள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ செயலியான DOE மூலமாகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
Published from Blogger Prime Android App