பிரித்தானிய பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக்!


பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து பேன்னி மோர்டாண்ட் விலகியதை தொடர்ந்து பிரதமராக பதவியேற்க இருந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தற்போது பதவிறே்றுள்ளார்.இவர் பிரித்தானியாவின் 57 வது பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில் பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றதை தொடர்ந்து, நீதித்துறை செயலாளர் பிராண்டன் லூயிஸ் மற்றும் வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக் இருவரும் பதவியில் இருந்து விலகியுள்ளனர்.

போரிஸ் ஜான்சன் மற்றும் லிஸ் ட்ரஸ் இருவரின் நெருங்கிய கூட்டாளியான வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக் ரிஷி சுனக்கின் அமைச்சரவையில் பணியாற்ற எதிர்பார்க்கவில்லை என முன்பே தெரிவித்து இருந்தார்.