ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி !

வண்ண மயமான கலாசார நிகழ்வான தீபாவளி நன்னாளில் வாழ்த்து தெரிவிப்பதில் தான் பெருமகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுபீட்சமான ஒரு நாட்டிற்கு சமாதானம், ஒற்றுமை, சகோதரத்துவம் என்பன மிகவும் முக்கியமானவை. இனம், மதம், கட்சி, நிறம் என்ற பிரிவினையின்றி, நம்வாழ்விலும், நாட்டிலும் சூழ்ந்திருக்கும் இருளை நீக்க வேண்டும். இதனைக் குறிக்கோளாகக் கொண்டு, நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். இதற்கு அனைவரும் கைகோர்த்துக் கொள்ள வேண்டும் என்று இத்தீபத் திருநாளில் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என ஜனாதிபதி வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த்தி செய்து, இலங்கையை சௌபாக்கியம் நிறைந்த நாடாக உருவாக்கும் சிறந்த எதிர்காலத்தின் தொடக்கமாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன். தீபத்திருநாளைக் கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Published from Blogger Prime Android App