பாடசாலைகளில் இணைப்புச் செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒன்று கூடல்.பாடசாலைகளில் இணைப்புச் செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக ஆராயும் ஒன்று கூடல் மற்றும் ஊடக சந்திப்பு இன்று(22) காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பல்வேறு விடயங்கள் பற்றிய கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

கிழக்குமாகாண பட்டதாரிகள் சங்கத் தலைவர் க.அனிதன் தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் பட்டதாரிகள் ஒன்றியத் தலைவர் அசங்க ரூபசீங்க,உப தலைவர் எஸ்.எம்.எச்.ஹமீட் மற்றும் மட்டு-அம்பாரை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.