இன்று சூரிய கிரகணம் !

சூரிய கிரகணம் இன்று (25) நிகழவுள்ளதுடன், இலங்கையர்கள் காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது.

சூரிய கிரகணத்தை யாழ்ப்பாணத்தில் மிகத்தெளிவாக காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர், பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார். இன்று (25) மாலை 5.27 மணியளவில் சூரிய கிரகணத்தை பார்வையிட முடியும்.

இதனை சுமார் 22 செக்கன்கள் வெற்றுக் கண்களால் பார்வையிட முடியும் எனவும் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
Published from Blogger Prime Android App