அரச நிறுவனங்களில் பெருமளவு ஊழியர்கள் பற்றாக்குறை !

அரச வருமானத்திற்கு பங்களிப்பு செலுத்தும் அரச நிறுவனங்களில் பெருமளவு ஊழியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதற்கான புதிய ஆட்சேர்ப்புகளை தற்போது மேற்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், அரச சேவையில் ஈடுபட்டுள்ள இளம் ஊழியர்களுக்கு போட்டிப் பரீட்சை நடாத்தி அதன் மூலம் ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார்.
Published from Blogger Prime Android App