தாமரை கோபுரத்தின் வருமானம் தொடர்பான அறிவிப்பு !

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக கருதப்படும் தாமரை கோபுரம் மக்களிடம் கையளிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் கிடைத்த வருமானம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, இதுவரையில் 900 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இதனை பார்ப்பதற்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 165,000 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாகவும் பிரதம நிறைவேற்று அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

பார்வையாளர்கள் வாங்கும் டிக்கெட்டுகள் மற்றும் அதில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்படும் வசதிகள் மூலம் குறித்த வருமானம் கிடைத்துள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
Published from Blogger Prime Android App