ஊட்டச்சத்துக்கான விசேட செயலணியை அமைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை !

ஊட்டச்சத்துக்கான விசேட செயலணியொன்றை நிறுவ சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் இந்த செயலணியை நியமிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பணிப்புரை விடுத்துள்ளார். ஊட்டச்சத்து தொடர்பான கலந்துரையாடல் நேற்று சுகாதார அமைச்சில் பல வைத்தியர்கள் மற்றும் மருத்துவ போஷாக்கு நிபுணர்களுடன் இடம்பெற்றது.

இந்த பணிக்குழுவில் ஊட்டச்சத்து துறையில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்கள் குழுவும்அடங்கும். அதன்படி, 2022-2024 அவசர போஷாக்கு திட்டம் நாடு முழுவதும் வயது உட்பட பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் கீழ் செயற்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் முதலில் அடுத்த வாரம் ஒரு மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

Published from Blogger Prime Android App