நாட்டில் நட்புறவான வெளியுறவுக் கொள்கை இல்லாததுதான் தற்போது நெருக்கடி நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது : மைத்திரிபால சிறிசேன !

நாட்டில் நட்புறவான வெளியுறவுக் கொள்கை இல்லாததுதான் தற்போது நெருக்கடி நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில், தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், எந்த பாகுபாடும் இன்றி உலக நாடுகள் அனைத்தும் உதவியதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் உலக நாடுகள் அனைத்து நாடுகளும் உதவிகளை வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு வெளியுறவுக் கொள்கையே காரணம் என சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி, கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் வெளியுறவுக் கொள்கை குறித்து அதிருப்தி வெளியிட்டார்.

இதேவேளை, கடந்த மூன்று வருடங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மக்கள் மத்தியிலும் அரசாங்கத்திலும் பாரிய கேள்விக்குரிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Published from Blogger Prime Android App