இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு நடத்த சுகாதார அமைச்சு தீர்மானம் !

இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு நடத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இறக்குமதி மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணப் பொருட்களின் தரத்தை நிலைநிறுத்த இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வுக்காக 25 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய உணவு வகைகள் தேர்ந்தெடுக்கப்படும் என்றும் மாதிரி சேகரிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

அண்மைய வாரங்களில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து கவலைகள் எழுந்த நிலையிலேயே, இலங்கையர்கள் உட்கொள்ளும் பல்வேறு வகையான உணவுகள் குறித்து ஆய்வு நடத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
Published from Blogger Prime Android App