எந்தவொரு அதிகாரமும் எனக்கு வழங்கப்படவில்லை - டயானா கமகே !

தனது பதவிக்கு உட்பட்ட எந்தவொரு அதிகாரமும் எனக்கு வழங்கப்படவில்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தனக்கு அறிவிக்காமல் பணிப்பாளர் நாயகம் ஒருவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இராஜாங்க அமைச்சரின் பிரகாரம், சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க, பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதை அடுத்து கடந்த வியாழக்கிழமை இராஜினாமா செய்துள்ளார்.

ஒரு பெண் ஏன் தலைமைப் பதவியில் இருக்க முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் ஏன் இராஜினாமா செய்ய வேண்டும். மேலும் இந்த விடயம் தொடர்பில் விசாரணை கோரியுள்ளார்.

​​தனக்கு இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் எந்தவொரு அதிகாரமும் அல்லது ஒரு விடயமும் வழங்கப்படவில்லை எனவும் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

Published from Blogger Prime Android App