மோட்டார் சைக்கிளிலில் வந்தவர்களினால் எமது உயிருக்கு அச்சுறுத்தல் - எம்.ஏ.சுமந்திரன் !

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் உட்பட என்னை பின்தொடர்ந்த கிழக்கு மாகாண பதிவிலக்கத்தை கொண்ட மோட்டார் சைக்கிளிலில் வந்தவர்களினால் எமது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை சிறப்புரிமையை பிரச்சினைகளை முன்வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2022 ஆகஸ்ட் 6 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தொடர்பில் சிறப்புரிமை விடயத்தை எழுப்பியிருந்தேன். அது ஒழுக்க நெறி மற்றும் சிறப்புரிமை குழு தொடர்பானது. இதன்படி ஒக்டோபர் 4 ஆம் திகதி அது தொடர்பான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி நான் அங்கு சென்றிருந்தேன். 'பெற்றி டீவி' அழைக்கப்பட்டு சான்று பகிரப்பட்டிருந்தாக முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் சிவனேசன்துரை சந்திரகாந்தன் குறித்த தவறான காட்சியை அனுப்பியுள்ளார்.

அதில் அவரின் குரலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தன் எவருக்கும் பிரயோசனமும் இல்லை. வெறுமனே ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றார் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான சான்றுகளின் பிரகாரம் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்பவரால் இது மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை ஒக்டோபர் 5 ஆம் திகதி சாணக்கியனும் நானும் நண்பகல் 12.45 மணியளவில் ஹோட்டன் பிளேசில் கூட்டமொன்றில் இரண்டு தனிப்பட்ட வாகனங்களில் சென்றோம். நாங்கள் பயணித்துக்கொண்டிருந்த போது பாதுகாப்பு தரப்பினர் எங்களை மோட்டார் சைக்கிளொன்று பின் தொடர்ந்து வந்தது என்று தெரிவித்து அதன் புகைப்படத்தை எடுத்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் இலக்கத் தகடை கொண்ட வாகனமே வந்திருந்தது. புலனாய்வு உறுப்பினர் ஒருவர் எங்களை பின்தொடர்ந்ததாக கறுவாத்தோட்டம் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார்.

என்னுடையதும் இராசமாணிக்கம் சாணக்கியனின் சிறப்புரிமை விடயமே இது. நாங்கள் பாராளுமன்றம் வருவதும் செல்வதும் பாராளுமன்ற சிறப்புரிமைக்கு உட்பட்டதே. சிறப்புரிமை மற்றும் ஒழுக்கநெறி தொடர்பான நடவடிக்கையின் பின்னர் ஏன் எங்களை இப்படி புலனாய்வு உறுப்பினர்கள் பின்தொடர்கிறார்கள். புலனாய்வு உறுப்பினர்களுக்கு கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. சபாநாயகர் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எங்களின் உயிருக்கான அச்சுறுத்தல் என்பதுடன் எங்களின் சிறப்புரிமை மீறலுமாகும் என தெரிவித்திருந்தார்.
Published from Blogger Prime Android App