அமெரிக்க தூதரகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ பிரதிச் செயலாளர் ஜோன் பேஸ் உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகம் முதன்முதலில் 1948 இல் இலங்கையில் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Published from Blogger Prime Android App