பதிவு செய்யாமல் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது !

பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு முன்னர் உரிய முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிகளுக்கு முறையான கட்டுப்பாடு இல்லாமல் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்போது உள்ளது போல், பதிவு இல்லாமல் ஒரே நேரத்தில் எரிபொருள் வழங்கினால், எல்லோருக்கும் வழங்க முடியாத நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Published from Blogger Prime Android App