மினுவாங்கொடை முக்கொலை சம்பவம் : பொதுமக்களின் ஆதரவை கோரும் பொலிஸார் !

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூவரை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக தேடப்பட்டு வரும் பிரதான சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார். அவரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் ஆதரவை பொலிஸார் கோருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஜயகொடகே சஞ்சீவ டோன சஞ்சீவ லக்மால் 39 வயதான ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, மஹிந்தராம வீதியை சேர்ந்தவர். தேசிய அடையாள எண் 833214292V உடன் தொடர்புடைய சந்தேக நபரின் புகைப்படம் மேலே உள்ளது.

இவர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கம்பஹா - 0718591608 உதவி பொலிஸ் அத்தியட்சகர் கம்பஹா - 0718591610 நிலைய பொறுப்பதிகாரி மினுவாங்கொடை - 0718591612
Published from Blogger Prime Android App