சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகளை வெளியிட்டது லிட்ரோ !

தமது நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை இன்று (05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், குறைக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 271 ரூபாயால் குறைக்கப்படும் என்றும் 5 மற்றும் 2.3 கிலோ சிலிண்டர்களின் விலைகளும் முறையே 107 மற்றும் 48 ரூபாய்களால் குறைக்கப்படும் என்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 4,551 ரூபாயாக இருந்த 12.5 கிலோ கிலோகிராம் சிலிண்டரின் விலை 271 ரூபாயால் குறைக்கப்பட்டு, 4,280 ரூபாயாக குறைவடையவுள்ளது.

1,827 ரூபாயாக இருந்த 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1,720 ரூபாயாகவும், 848 ரூபாயாக இருந்த 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 800 ரூபாயாகவும் குறைவடையவுள்ளன.

Published from Blogger Prime Android App