சடுதியாக குறைந்தது கோதுமை மாவின் விலை !

சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 25 கிலோகிராம் நிறையுடைய கோதுமை மா மூடை ஒன்றின் விலை 7 ஆயிரத்து 250 ரூபாவாகும் அவர் தெரிவித்துள்ளார். கோதுமை மா இறக்குமதி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக, இவ்வாறு விலை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஒரு கிலோகிராம் கோதுமை மா 300 ரூபாய் முதல் 400 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Published from Blogger Prime Android App