தேர்தல்களை பிற்போட உடன்படமாட்டோம் , வெற்றி எம் வசமே உள்ளது : ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன !

தேர்தல்களை பிற்போட உடன்படப்போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “தேர்தலை முன்கூட்டியே நடத்துமாறு போராடியக் கட்சியே எமது கட்சியாகும். தேர்தலை கோரி நீதிமன்றத்தைக்கூட நாடினோம். ஜனநாயகமே எமது கட்சியின் பிரதான நோக்கம்.

எனவே, தேர்தல்களை பிற்போட உடன்படமாட்டோம். அதனை பிற்போட வேண்டிய தேவையும் எமக்கு கிடையாது. ஏனெனில் வெற்றி என்பது எம் வசமே உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
Published from Blogger Prime Android App