அனைத்து குடிமக்களும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும் மற்றும் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் !

கருவுறாமை மருந்து தூண்டப்பட்ட உணவு, மலட்டு அறுவை சிகிச்சைகள் மற்றும் வைத்தியர் முகமட் ஷாபி உள்ளிட்ட போலி சம்பவங்கள் இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வை தூண்டுவதற்கு வழிவகுத்தது, இது நாட்டில் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகாரத்தை பெறுவதற்காக இனவாதத்தை விதைத்ததாகவும் இனவாதம், மத தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தேசிய இனங்கள் இருக்கின்றனவே தவிர சிறுபான்மையினர் அல்ல என்ற நிலைப்பாட்டில் தானும் ஐக்கிய மக்கள் சக்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

12 தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் விளக்கங்கள் கூறப்பட்ட போதிலும், அது தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இனவாதம் மற்றும் பாகுபாடு காரணமாக நாடு ஆபத்தில் இருப்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மத்திய கிழக்கு நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கான இலங்கையின் வாய்ப்புகளை இவ்வாறான சம்பவங்கள் களங்கப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். அனைத்து குடிமக்களும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும் மற்றும் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Published from Blogger Prime Android App