இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகள் கொள்முதல் : சுகாதார அமைச்சு !

நாட்டில் பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகள் உட்பட 1,300 வகையான மருந்துகளுக்கான கொள்முதல் உத்தரவு இந்திய கடன் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 1200 இற்கும் மேற்பட்ட சத்திரசிகிச்சை கருவிகளுக்கும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார். டிசம்பர் மாதத்துக்குள் குறித்த கையிருப்பு நாட்டிற்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 120 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கே தட்டுப்பாடு நிலவுவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்திய கடன் திட்டத்தின் கீழ் அனைத்து கொள்முதல் முன்பதிவுகளும் அதற்கேற்ப செய்யப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் விநியோகத்தில் சிறிது தாமதம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்,

நாட்டில் 14 வகையான உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்கப் பெறுவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
Published from Blogger Prime Android App