சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் , இருதரப்பினருக்கிடையே மோதல்- பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் !

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி தொழிலுக்கு எதிராக இன்று இடம்பெற்ற போராட்டத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத மீன்பிடி தொழிலுக்கு ஆதரவான கும்பல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக முல்லைத்தீவில் பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மேலும் அங்கு ஏற்பட்ட பதற்றத்தை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Published from Blogger Prime Android App