கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொதுப்பட்டமளிப்பு விழா!


கிழக்குப் பல்கலைக்கழகத்தின்
26 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா 
மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்தின் நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.

இப்பட்டமளிப்பு விழாவின் 
ஆரம்ப நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் வாக்லே கலந்துகொண்டதுடன் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர்
பேராசிரியர் முனைவர் ந.பஞ்சநதமும்
பங்கேற்றார்.

கிழக்குப்பல்கலைக்கழகம் அதன் 42 ஆவது ஆண்டினைப் பூர்த்தி
செய்யும் வேளையில் இப்பட்டமளிப்பு விழா நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை வெளிவாரி மற்றும்
உள்வாரியாக கல்வி நெறிகளைப்பூர்த்தி செய்துள்ள 2506 பேர் பட்டம் பெறுகின்றனர்.
கலாநிதி, முதுதத்துவமாணி, விவசாய, விஞ்ஞான முதுமாணி, முதுகலைமாணி, முதுகல்விமாணி 
வணிக நிருவாகத்தில்  முதுமாணி, 
அபிவிருத்திப் பொருளியல் முதுமாணி, முகாமைத்துவ
பட்டப்படிப்பின் டிப்ளோமா மற்று இளமாணி பட்டம் உட்பட 1247 பேருக்கு முதல் நாள் பட்டம் வழங்கப்பட்டது.

இரண்டாம் நாளான நாளைய பட்டமளிப்பின் போது 1259 பேர் பட்டம் பெறவுள்ளனர். கிழக்குப்பல்கலைக்கழக
வரலாற்றில் முதல்தடவையாக தொழில்நுட்பபீட மாணவர்களுக்கான  விவசாய தொழில் நுட்பம் மற்றும் முயற்சியான்மையில் உயிர்
முறைமைகள் தொழில் நுட்ப இளமாணி பட்டம் வழங்கப்பட்டது.