தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான கட்டணங்கள் திருத்தம் !

தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. நவம்பர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, முதன்முறையாக தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கு 200 ரூபா கட்டணம் செலுத்தப்பட வேண்டும். தேசிய அடையாள அட்டையின் நகலைப் பெறுவதற்கு 1000 ரூபா கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேசிய அடையாள அட்டையின் திருத்தப்பட்ட பிரதியை வழங்குவதற்கு 500 ரூபாவும், காலாவதியான தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக புதிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு 200 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.
Published from Blogger Prime Android App