போதிய அளவில் கோதுமை மா கிடைக்குமாயின் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் !

போதிய அளவில், இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா கிடைக்குமாயின், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ள போதும், அதை கொள்வனவு செய்வதற்கு பேக்கரிகளுக்கு 300 ரூபாய் வரை செலவாவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா போதிய அளவு கிடைக்கப்பபெறும் பட்சத்தில் அடுத்த வாரம் முதல் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்றார்.
 
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை இப்போதே அறிவிக்க முடியாது என்று தெரிவித்த அவர், எதிர்காலத்தில் அது குறித்து அறிவிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.
Published from Blogger Prime Android App