நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியை பாராட்டியது உலக வங்கி !

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் அரசாங்கத்தின் முன்முயற்சியை உலக வங்கி பாராட்டியதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மாலைத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடாட்- செர்வோஸுடன் நடத்திய விசேட கலந்துரையாடலின்போது, இந்த பாராட்டு கிடைக்கபெற்றதாக அவர் தெரிவித்தார்.

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வருவதாகவும், மேலும் நிர்வாக சீரமைப்பு, விரிவான கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் திட்டத்தில் முன்னேற்றம் போன்றவற்றை மேலும் தொடர ஊக்குவிப்பதாகவும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் கூறினார். இலங்கையின் நிலைமையை உலக வங்கி உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்

இந்த நிகழ்வில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உட்பட மேலும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Published from Blogger Prime Android App