க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் இறுதிக்குள் வெளியிடப்படும் – கல்வியமைச்சு !

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டை வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தினால் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதைக் கருத்திற்கொண்டு, அந்தந்த பாடசாலைகளின் அதிபரால் சான்றளிக்கப்பட்ட அடையாள அட்டை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.Published from Blogger Prime Android App