ஒன்றுசேர்ந்து மீண்டும் திருட சிலர் அழுது கொண்டே அழைக்கின்றனர்- எதிர்க் கட்சித் தலைவர்

நாட்டை தனித்தனியாக கொள்ளையடித்த குழுக்கள், தற்போது ஒன்று சேர்ந்து கொள்ளையடிக்க ஒருவரையொருவர் அழைத்துக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

நாட்டை மேலும் வங்குரோத்து அடைய செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

;நாட்டை அழித்து மக்களை அசௌகரியத்துக்கு மேல் அசௌகரித்துக்கு உட்படுத்திய கும்பல் மீளவும் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது.

அந்தத் திருடர்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர நாட்டு மக்களும் தயாராக இல்லை.

தற்போது மீண்டும் டீல்கார மோசடி கும்பல் ஒன்று சேர்ந்து எழுந்து நிற்க தயாராகியுள்ளது.

இதற்காக ஒன்றிணையுமாறு ஒருவர் அழுது கொண்டே பிச்சை எடுப்பது போல கோரிக்கை விடுகின்றனர்.

ஆனால் அவ்வாறு அழுகின்றவர்களுக்கு இந்நாட்டில் இருநூற்றி இருபது இலட்சம் மக்கள் இன்னும் அழுது கொண்டே வாழ்கிறார்கள் என்பது புரியவில்லை.

தங்கள் குழந்தைகளுக்கு பால்மாவை வாங்கி கொடுக்க முடியாமல் தாய்மார்கள் அழுதுகொண்டு இருக்கின்றார்கள். உரம் இன்மையால் விவசாயிகள் அழுகின்றார்கள்.

எதிர்காலமின்றி இளைஞர் தலைமுறையின் குரல் எழுப்புகின்றனர்.

பொதுவாக 220 இலட்சம் பேரும் அழுது கொண்டே வாழ்கிறார்கள். இந்த விடயங்கள் ஒரு சிலருக்கு புரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது
Published from Blogger Prime Android App